பிரட், பனீர், உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம்!

 
மாத்திரை


 
டெல்லியில் நேற்று நடைபெற்ற 56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உயிர் காக்கும் மருந்துகள், தனிநபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு 

பீட்சா
உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து முற்றிலும் நீக்கம்
அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18%  
டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரி 
ஹெல்த் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ்-க்கு 18% ஆக இருந்த வரி முற்றிலுமாக நீக்கம் 

ஜிஎஸ்டி
தெர்மோமீட்டர், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன், அனைத்து நோயறியும் கருவிகள் மற்றும் ரீ-ஏஜண்ட்கள், குளூக்கோமீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ், பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண்ணாடி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைப்பு  
இந்த முடிவு, மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் மக்களுக்கு மருத்துவ சேவைகளை மலிவாக்குவதற்கு அரசு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?