தூள்... கின்னஸ் சாதனை படைத்த ஆடம்பரமான பர்கர்.... வைரல் வீடியோ!

 
பர்கர்


 
உலக பிரசித்தி பெற்ற பிரபல சமையல் கலை நிபுணர் ராபர்ட் ஜான் டி வென். இவர்  டி டால்டன்  நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்து வருபவர்.  இவர் தற்போது ஒரு ஆடம்பரமான மற்றும் அதிக சுவை நிறைந்த விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ‌.4.5 லட்சமாக அறியப்பட்டுள்ளது.  இந்த ஆடம்பரமான பர்கருக்கு ராபர்ட் ஜான் டி வென்  “தி கோல்டன் பாய்” எனப் பெயரிட்டுள்ளார்.  


இந்த பர்கரில் வாக்யு மாட்டிறைச்சி, குங்குமப்பூ, தங்க இலைகள் மற்றும் பல சத்தான மற்றும் விலை உயர்ந்த பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகின் ஆடம்பரமான உணவுப் பொருட்களில் இந்த பர்கரும் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்ததாக ராபர்ட் விளக்கம் அளித்துள்ளார்.  

இந்த பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோவையும் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள், உணவுப் பிரியர்கள், பர்கர் விரும்பிகள் பலரும் இந்த  வீடியோவுக்கு பாராட்டுக்களையும், கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web