குகேஷ் சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி ரேபிட் பிரிவில் பட்டம் வென்று சாதனை!

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.இந்தியாவின் உலக சாம்பியன் குகேஷ் ரேபிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட் செஸ் டூரில் இந்த தொடரும் ஒன்றாக உள்ளது.
இதன் ரேபிட் பார்மெட் முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் நடைபெற்ற 5 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 6வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து 7-வது சுற்றில் அனிஷ் கிரி, 8-வது சுற்றில் இவான் சரிச் உடன் விளையாடினார். அந்த 2 சுற்றும் டிராவில் முடிந்தது. இதன் மூலம் ரேபிட் பிரிவில் 14 புள்ளிகளுடன் பட்டம் வென்றார் குகேஷ். ரேபிட் பிரிவில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் போலந்து வீரர் துடா. 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார் கார்ல்சன். 9 புள்ளிகள் எடுத்த பிரக்ஞானந்தா 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!