” குணா ” ரீ-ரிலீஸ்க்கு தடை ... உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
குணா


 உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் குணா. இந்த திரைப்படம்  1991ல்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குணா படத்தை மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான  பிரமிட் படத் தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. இந்நிலையில் மறுவெளீயீட்டுக்கு  இடைக்கால தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஞ்சுமேல் பாய்ஸ்
சமீபத்தில் மலையாளத் திரையுலகில் வெளியான  ” மஞ்சுமெல் பாய்ஸ் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு  நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!
அந்த மனுவில், படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் . குணா படத்தை மறு வெளியீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை தெரிவித்து, அத்தொகையை தனக்கு வழங்கும்படி, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவு பிறப்பிக்க  வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளார். அத்துடன்  ஜூலை 22ம் தேதிக்குள் மனுவுக்கு  பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web