நியூயார்க் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்!

அமெரிக்கா வன்முறையின் விளைநிலமாக மாறி வருகிறது என்பதை பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. வாரம் ஒருமுறை பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பதால், நாட்டு மக்களுக்கு வன்முறைகள் சகஜமாகிவிட்டன. இந்த வகையில் நியூயார்க் நகரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவில் நேற்று மாலை (6.20 மணியளவில்) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் பூங்காவில் இருந்த 6 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் சட்டப்பூர்வமாக துப்பாக்கி உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது போன்று மளிகை கடைகளில் இயந்திரத்தில் இருந்து தோட்டாக்களை எடுக்கும் வசதியும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!