நடிகைகளுடன் ஜி.வி.பிரகாஷ் நெருக்கம்.. பாடகி சைந்தவி ஓபன் டாக்!

 
ஜிவிபிரகாஷ்

தமிழ் திரையுலகில் விவாகரத்து செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயமாக இப்படி தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் விவாகரத்துக்கு மல்லுக்கட்டி நிற்கும் திரையுலக ஜோடிகள் ஏ.எல்.விஜய் - அமலாபால் துவங்கி தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்-சைந்தவி வரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் விட்டுக்கொடுத்து வாழ்கிற போக்கு இவர்களுக்கு இல்லாதது வருத்தமே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

ஜிவிபிரகாஷ்
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க துவங்கிய பின்னர், நடிகைகளுடன் நெருக்கம் காட்ட துவங்கியதில் இருந்து இவர்களது குடும்ப வாழ்க்கையில் சூறாவளி வீசத் துவங்கியது என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதைப் போலவே சைந்தவியின் பழைய வீடியோ பேட்டியொன்று வைரலாகி வருகிறது. 12 வருட காதலுக்கு பின் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி இப்போது 4 வயதில் மகள் உள்ள நிலையில், விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த பேட்டியில் பாடகி சைந்தவி, "சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று ஜிவி பிரகாஷ் சொன்னதுமே அவர் நடிப்பது குறித்து தடையில்லை என்றும், நடிப்பதற்கு நான் சில கண்டிஷன்களை போட்டேன். ஆனால் அவர் எந்த கண்டிஷனையும் பின்பற்றவில்லை என்றும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும், அதுவரை நான் ஜிவி பிரகாஷை நான் வேறு பெண்ணுடனும் இத்தனை நெருக்கமாக இருந்து பார்த்ததில்லை.

ஜிவிபிரகாஷ்

அப்போது தான் முதன்முறையாக டார்லிங் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த சில நெருக்கமான காட்சிகளைப் பார்த்த போது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. ஆனால் அதை மறக்கடிக்கும் வகையில் படம் அமைந்திருந்தது.  அதன் பிறகு, நடிகர் என்றால் இதெல்லாம் இயல்பு தான் என்று புரிந்தது. நடிகர்களுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. அவர்களுக்கும் வீட்டில் மனைவி என்ற ஒருவர் இருக்கிறார். அவர்களும் என்னை போன்று தானே உணர்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இப்போது எனக்கு அது பழகி விட்டது. அவரை சில நடிகைகளுடன் நெருக்கமாக பார்க்கும் போது எனக்கு வருத்தமாகத் தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.  இந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!