சைந்தவி - ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து!? இது தான் காரணமா?

 
ஜிவிபிரகாஷ்
 

பிரபல காதல் தம்பதியர் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து செய்யும் முடிவிற்கு வந்திருப்பதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  கடந்த 2013ல் ஆண்டில் திருமணமான இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார்.  ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர்களாக ஏ.எல்.விஜய், செல்வராகவன், தனுஷ் என்று அனைவருமே காதலித்த பெண்ணையே திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்தவர்கள். இந்த வரிசையில் ஜிவி பிரகாஷூம் இணைவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

“தமிழ் தான் எனக்கு முதல் , தேசத்திற்கு அடுத்த இடம் தான்”! ஜி.வி.பிரகாஷ் பொளேர்!


ஒரே பள்ளியில் படித்து வந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி என இருவருமே சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்த நிலையில், பின்னர் காதலிக்க துவங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யா ஜோடியைத் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் சைந்தவி


இசையமைப்பாளராக இருந்த வரை மனைவி மீது அன்பை செலுத்தி வந்த ஜிவி பிரகாஷ், ஹீரோவாக நடிக்க துவங்கியதும் மனைவியிடமும் ஈகோவைக் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே எழுந்து வந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாகவே இருவரும் ஒன்றாக இல்லை என்றும் பிரிந்து வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. ஹீரோ ஜிவி பிரகாஷின் போக்கிலும் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டதாகவும், பார்ட்டிகளுக்கு சென்று விட்டு அர்த்த ராத்திரியில் வீடு திரும்புவது என அடுத்தடுத்து ஜிவி பிரகாஷின் நடவடிக்கைகளில் சைந்தவி அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web