பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டோம்... விவாகரத்தை உறுதி செய்த ஜிவிபிரகாஷ்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஜிவிபிரகாஷ்
 

பிரபல காதல் தம்பதியர் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து செய்யும் முடிவிற்கு வந்திருப்பதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  கடந்த 2013ல் ஆண்டில் திருமணமான இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார்.  ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர்களாக ஏ.எல்.விஜய், செல்வராகவன், தனுஷ் என்று அனைவருமே காதலித்த பெண்ணையே திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்தவர்கள். இந்த வரிசையில் ஜிவி பிரகாஷூம் இணைவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

“தமிழ் தான் எனக்கு முதல் , தேசத்திற்கு அடுத்த இடம் தான்”! ஜி.வி.பிரகாஷ் பொளேர்!


ஒரே பள்ளியில் படித்து வந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி என இருவருமே சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்த நிலையில், பின்னர் காதலிக்க துவங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யா ஜோடியைத் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இத்தகவலை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளனர். அதில்  "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன.  நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான்  சிறந்த முடிவு என நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web