H-1B விசா கட்டணம் அதிரடி உயர்வு... அமெரிக்கர்களுக்கே முதல் உரிமை... வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு!
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் ட்ரம்ப், , H1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் விதிக்கும் அதிரடி உத்தரவை அறிவித்திருந்தார். இது, H1B விசா திட்டத்தை பெரிய அளவில் மாற்றியமைக்கும் முதல் படியாகக் கருதப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், “அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை தக்கவைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கம்,” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த உத்தரவு, செப்டம்பர் 21, 2025 முதல் அமல்படுத்தப்பட்டு அடுத்த 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. H1B விசா, டெக், இன்ஜினியரிங் போன்ற உயர் திறன் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைக்க உதவும் திட்டம் 2024-ல் H1B விண்ணப்பதாரர்களில் 71% இந்தியர்கள் (அதிகம் 72,000 விசாக்கள்). இந்த கட்டணம், விண்ணப்பதாரர்கள் அல்ல, நிறுவனங்கள் செலுத்த வேண்டும், ஆனால் இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக அமையும்.
அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும், புதிய விசா விண்ணப்பங்களை பாதிக்கும். இந்தியாவின் IT துறை, அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை அனுப்புகிறது, இது அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கலாம்.இந்த உத்தரவு, ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. 2017ல் H1B விசா விதிகளை கடுமையாக்கிய ட்ரம்ப், இப்போது கட்டண உயர்வு மூலம் வெளிநாட்டு ஊழியர்களை குறைக்க முயற்சித்து வருகிறார். இந்திய அரசு, இதை எதிர்த்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய IT நிறுவனங்கள், இந்த கட்டணத்தால் $1.5 பில்லியன் (ரூ.12,600 கோடி) கூடுதல் செலவு ஏற்படலாம். இதன் மூலம் இந்தியர்களுக்கு அமெரிக்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்படலாம். குறிப்பாக டெக் துறையில்.இந்த முடிவு, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையை பாதுகாக்கும் என வெள்ளை மாளிகை கூறுகிறது. ஆனால், இந்தியாவின் IT துறை, இது பெரும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025-ல் H1B விசாக்கள் 85,000 வரை மட்டுமே, இதில் இந்தியர்கள் 70% . இந்த உத்தரவின் மூலம் அமெரிக்க-இந்திய வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது..
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
