விட்டாச்சு லீவு... நாளை முதல் 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை...!

 
விடுமுறை

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான வினாத்தாள் முறை கடைப்பிடிக்கப்பட்டது. டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்க இருந்த தேர்வுகள் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

விடுமுறை

அதன் பிறகு தொடங்கிய அரையாண்டு தேர்வுகளில் தென் மாவட்ட மழையால் அம்மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாவட்டத்தில்  பள்ளி மாணவ மாணவர்கள் வெள்ளத்தில் தங்கள் புத்தகங்களை இழந்திருந்தால் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். இதன் அடிப்படையில் இந்த விடுமுறை நாட்களுக்குள் அவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வித் துறைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.  

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்
அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர்7 ம் தேதி தொடங்கி இன்று டிசம்பர் 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி தொடங்கி நேற்று டிசம்பர் 21 ம் தேதி வரையும் நடைபெற்றது. பல பள்ளிகளில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைகின்றன. இந்நிலையில் நாளை முதல்  தொடர்ந்து 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

From around the web