பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழக பள்ளிக்கல்வித் துறை, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவிப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான தேதிகள் மற்றும் பாட வாரியான விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

6 முதல் 9ம் வகுப்புகள் மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. தமிழ்மொழி, ஆங்கிலம், விருப்ப மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் வரிசைப்படி நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு, தேர்வுகளுக்கு இடையில் போதிய இடைவெளி வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். பொது தேர்வுகளுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்த அரையாண்டுத் தேர்வுகள், மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் முக்கியமான கட்டமாகத் துறை குறிப்பிடுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிக்கு தனித் தனியாக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 10 முதல் 23 வரை நடைபெறும். கலை, அறிவியல், வர்த்தகப் பிரிவுகளுக்கேற்ப, மாணவர்கள் எடுத்த பாடங்களின்படி இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், வரலாறு, பொருளாதாரம், கணக்குப்பதிவியல், கணினி அறிவியல் போன்றவற்றிற்கு தேர்வுகள் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்

12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23 வரை தேர்வுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பில் அரையாண்டுத் தேர்வு முக்கியமான மதிப்பீடாக இருப்பதால், மாணவர்கள் முன்னெச்சரிக்கையுடன் படிப்பை தொடர வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், வரலாறு, தாவரவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் நடைபெறும்.

மாணவர்கள் தேர்வு அட்டவணையைப் பார்த்து முன்கூட்டியே தயார் செய்வது நல்லது எனவும், பள்ளிகள் தங்களது நேர அட்டவணைகளில் மாற்றமின்றி தேர்வுகளை முறையாக நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!