36000 பேர் கொன்று குவிப்பு... போரை நிறுத்த ஹமாஸ் ஒப்புதல்... இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளுமா?

 
காசா - இஸ்ரேல்

 இஸ்ரேல் பாலஸ்தீனப்போர்  ஒரு வருடத்துக்கும்  மேலாக நீடித்து வரும் நிலையில் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. போரை நிறுத்தச்சொல்லி உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போரை நிறுத்த முன்மொழிந்துள்ளார். இதனை ஏற்று ஐநா சபை போரை நிறுத்த இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் போரை நிறுத்துவதற்கு ‌ முன்வந்துள்ளனர். அவர்கள் போரை நிறுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்

அத்துடன்  பிணைக்கைதிகளை விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதற்கு தற்போது இஸ்ரேல் நிலை குறித்து  கேள்விக்குறியாக உள்ளது.   இஸ்ரேல் காசா  போர் ஒரு வருடம் தாண்டியும் நடைபெறும் நிலையில் காசாவில் 36000க்கும்  மேற்பட்டோர்  கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  இஸ்ரேல் தற்போது அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இருந்த போதிலும்  இஸ்ரேல் அதை கண்டுகொள்ளவில்லை.  தற்போது கமாஸ் அமைப்பினர் போரை நிறுத்த முன் வந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனை ஏற்று இஸ்ரேல் போரை நிறுத்துமா? இல்லையா? என்பதுதான் உலக நாடுகளின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web