ஏ.டி.எம்மில் கைவரிசை.. தமிழக பதிவு எண் காரில் வந்த ஹரியானா கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு!

 
பெங்களூரு ஏ.டி.எம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த ஹரியானா கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வந்த கொள்ளையர்கள் போர்வையை போர்த்திக்கொண்டு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் சிசிடிவி கேமராவில் கருப்பு பெயின்ட் அடித்து, ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழக பதிவு எண் கொண்ட காரை கொள்ளையர்கள் திருடி அதில் ஏறியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வரும் நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web