கை உதறல்... நடிகர் விஷால் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்!
பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஷாலின் மதகஜராஜா ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் கையில் மைக் பிடித்து பேச முடியாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கை நடுங்கிக் கொண்டே இருந்தது. படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடன் விஷால் வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் “ விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்.” எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!