மாமனாருடன் தனிமையில் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த 50 வயதான கீதா தேவி. அவருக்கு குருகு யாதவ் என்ற கணவரும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு வெளியே சென்றுவிட்டு கீதா தேவி வீடு திரும்பியிருந்தார். அப்போது, அவரது கணவர் மற்றும் மருமகள் உல்லாசமாக இருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கீதா தேவி, தனது மகன் தீபக்கிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் இது குறித்து கூறுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் மருமகள் கீதா தேவியை கொலை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, கீதா தேவியின் மருமகள், செங்கல் மற்றும் மரக்கட்டையால் தனது மாமியாரின் தலையில் கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கீதா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்தக் கொலையை மறைக்க, கீதா தேவியின் உடலை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்தார். பின்னர், அவரது மாமியார் காணாமல் போனதாக அக்கம் பக்கத்தினரிடம் அவர்கள் பாசாங்கு செய்தனர். அதுமட்டுமின்றி, அவரது கணவர் தீபக்கிடம் தனது மாமியார் அடையாளம் தெரியாத ஒருவருடன் சென்றதாக கூறினார்.
இதற்கிடையில், கீதா தேவியின் கணவர் குருகு யாதவ் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சில நாட்களுக்கு முன்பு கழிப்பறையில் இருந்து கீதா தேவியின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, மாமனார் மற்றும் மருமகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!