எந்நேரமும் பெண்களுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட ஓனர் பைக் உட்பட 5 பைக்குகளுக்கு தீ வைத்த முதியவர் கைது!
சென்னை, கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம், கால்வாய் சாலை 1வது தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வினோத் உடனடியாக அங்கு சென்று பார்த்தார். அங்கு வினோத்தின் வாகனம் உள்பட 5 வாகனங்கள் எரிந்து சாம்பலானது. வினோத் கொடுத்த தகவலின் பேரில் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த நடராஜ் என்ற 65 வயது முதியவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் அவரை விசாரிக்க முடிவு செய்தபோது, சம்பவத்தன்று இரவு அவர் தலைமறைவானார். காலையில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாதது போல் திரும்பி வந்து எதுவும் நடக்காதது போல் நடித்துள்ளார். பின்னர் அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த நடராஜை போலீசார் கைது செய்தனர். போலீசார் முதியவர் நடராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நடராஜ், ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து, 6 ஆண்டுகளுக்கு முன், மனைவியுடன், வினோத் வீட்டில், லீசுக்கு குடியேறினார். இதற்கிடையே நடராஜின் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். அதன் பிறகு அடிக்கடி மது அருந்திவிட்டு வருவார். அப்படிச் செய்யும்போது பல பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வருவார்.
ஒரு கட்டத்தில், இவர் செய்யும் அசிங்கத்தை தாங்க முடியாத வீட்டின் உரிமையாளர் வினோத், சிசிடிவி கேமராவை பொருத்தினார். இதைப் பார்த்த முதியவர் நடராஜ், பலமுறை உடைக்க முயன்றது கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு நாள் முதியவர் நடராஜ் ஒரு பெண்ணை அழைத்து வந்தார். குடிபோதையில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனால், முதியவர் நடராஜ் அந்த பெண்ணை சரமாரியாக பிடித்து வெளியே இழுத்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதை பார்த்த வினோத், நடராஜை வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். ஆனால் லீஸ் பணத்தை கொடுத்தால் தான் காலி செய்வதாக நடராஜ் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், 3 மாதங்களுக்குள் பணத்தை செலுத்த வினோத் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், பழிவாங்கும் நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த வினோத்தின் வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார். இதனிடையே தலைமறைவாக இருந்த நடராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!