செம குத்து... 'புஷ்பா 2' பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஹன்சிகா...வைரலாகும் வீடியோ!

 
'புஷ்பா 2' பாட்டுக்கு தாவணியில் ஆட்டம் போட்ட ஹன்சிகா...வைரலாகும் வீடியோ!

'புஷ்பா 2’ படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் சாமி பாடலின் ஹூக் ஸ்டெப்பை நடிகை ஹன்சிகா மோத்வானி நடனம் ஆடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' படம் ஆகஸ்ட் மாதம் 15 அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான ‘சாமி...’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்து வந்தனர். இந்த டிரெண்டில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ராஷ்மிகாவின் சாமி ஹூக் ஸ்டெப்புக்கு கலர்ஃபுல்லான பாவடை, தாவணியில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் 'புஷ்பா 2' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஹன்சிகா

’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகம் வசூல் செய்ததால் இரண்டாம் பாகத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்ற செய்தி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!