வார தொடக்கத்திலேயே சந்தோஷம்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!
வாரத்தின் தொடக்க தினமான இன்று காலை நேர வர்த்தக நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகி வருகிறது.

சென்னையில் நேற்று ரூ.56,960க்கு விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
