கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டம்.. அடுத்த நாளே மரணமடைந்த பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
ரிச்சர்ட் சிம்மன்ஸ்

ரிச்சர்ட் சிம்மன்ஸ் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்தவர். இவர் ஒரு தொலைக்காட்சி பிரபலம், அவர் பல உடற்பயிற்சி கூடங்களை திறந்து வீடியோக்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார். இவர் ரசிகர்களால் 'பிட்னஸ் குரு' என்று அழைக்கப்படுகிறார். நெவர் சே டயட் உட்பட 9 புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் சிம்மன்ஸ் தனது 76வது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். பின்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த பதிவில், 'நன்றி...என் பிறந்த நாள் குறித்து இவ்வளவு செய்திகள் என் வாழ்நாளில் வந்ததே இல்லை! நான் இங்கே உட்கார்ந்து மின்னஞ்சல் எழுதுகிறேன். மிக அழகான வெள்ளிக்கிழமை. அன்புடன், ரிச்சர்ட்.' ஆனால், அடுத்த நாளே அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ரிச்சர்ட் சிம்மன்ஸின் திடீர் மரணம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!