திடீரென உல்லாசத்திற்கு முழுக்கு போட்ட இளம்பெண்.. ஆத்திரத்தில் எரித்துக் கொன்ற வாலிபர்... மதுரையில் பரபரப்பு!

 
வைஜெயந்தி

மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (31). இவரது மனைவி வைஜெயந்தி (28). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வைஜெயந்தி கட்டிட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வழக்கம்போல் காலை வேலைக்கு சென்ற வைஜெயந்தி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கணவர் மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையே மதுரை விரகனூர் அருகே வைகையாறு பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, ​​பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தியின் உடல் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வைஜெயந்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், சிவகங்கை மாவட்டம் பிஷர்பட்டினம் பகுதியை சேர்ந்த கருப்பையா (45) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் கருப்பையா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் சேர்ந்து மணலூர் வைகை ஆற்றில் வைஜெயந்தியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: கருப்பையா கட்டிடம் கட்டும் பணியில் கொத்தனாராக பணிபுரிந்து வந்ததால், அவரிடம் வைஜெயந்தி சித்தாள் வேலை பார்த்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனியாக உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கருப்பையாவை வைஜெயந்தி தவிர்த்துள்ளார். இதனால் வைஜெயந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கருப்பையா சந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கருப்பையா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் சேர்ந்து வைஜெயந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 21ம் தேதி இரவு அவரை வைகை ஆற்றுக்கு வரவழைத்து கருப்பையாவும், ஜெயகாந்தனும் சேர்ந்து கொன்று உடலை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web