மீண்டும் மீண்டும் பல பிறந்த நாள் வர வாழ்த்துக்கள்... ரோஹித் சர்மா மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் தனது மனைவி ரித்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி பெற்றது.
அத்துடன் டி20யில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். ரோஹித் சர்மா தனது நீண்டநாள் காதலி ரித்திகா சஜ்டாவை முதன்முதலாக 2008ல் சந்தித்து 2015ல் திருமணம் செய்தார். இவர்களுடைய மகள் 5 வயது சமைரா . தற்போது ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மீண்டும் மீண்டும் பல பிறந்தநாள் வர வாழ்த்துகள் ரித்திகா.

வாழ்க்கையின் நீ என்னுடன் இருக்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நல்ல நாளாக அமையட்டும்" என பதிவிட்டுள்ளார். மேலும் ரோஹித்தின் மனைவி ரித்திகாவுக்கு இது 37வது பிறந்தநாள். இவருக்கு கடந்த மாதம் பெண்குழந்தைக்கு அடுத்ததாக ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
