சென்னை மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. விரைவில் அறிமுகமாகும் மிதக்கும் ஹோட்டல்!

 
 மிதக்கும் ஹோட்டல்

சென்னையில் விரைவில் மிதக்கும் ஹோட்டல் தொடங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் மிதக்கும் கப்பல் ஓட்டல் இயங்கி வருவதும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு என்ற இடத்தில் மிதக்கும் உணவுப் படகு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிந்ததும் மக்கள்  மிதக்கும் ஹோட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மிதக்கும் உணவுக் கப்பல் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டால், கப்பலில் மிதந்தபடி உணவு உண்ணும் போது சென்னைவாசிகள் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்றும், சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web