மகிழ்ச்சியான செய்தி... இனி EMI தவணை கட்ட அபராதமின்றி 7 நாட்கள் கூடுதல் அவகாசம்! ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!

 
ரிசர்வ் பேங்க்

நாடு முழுவதுமே நடுத்தர  மக்களுக்கு இந்த செய்தி பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. கடைசி நாள் பரபரப்புக்கு பழக்கமானவர்கள், 5,10 தேதிகளில் வங்கியில் கடன் தவணை கட்ட வேண்டுமே என தூக்கத்தைத் தொலைத்தவர்களுக்கு இது இனிய செய்தி .வரும் 2024 ஜனவரி முதல் வங்கிகளில் செலுத்தும் மாத இஎம்ஐ,  குறித்த தேதியில் கட்ட முடியாதவர்களுக்கு ஒரு வாரம் காலம் கிரேஸ் டைம் கொடுக்கலாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 2 முதல் 3 கோடி நேரடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வீட்டு கடன் கட்டவில்லை என வீட்டில் எழுதிய நிறுவனம்

ரிசர்வ் வங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது இஎம்ஐ கட்டுபவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இஎம்ஐ செலுத்த வேண்டிய தேதியைத் தவறவிட்டால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இதுவரை பொதுவாகக் காணப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஆனால் இனி வரும் காலங்களில் இந்த விதிகளில் மாற்றம் கொண்ட வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி , இஎம்ஐ குறித்த தேதியில் கட்ட முடியாதவர்களுக்கு ஒரு வாரம் காலம் கிரேஸ் டைம் கொடுக்கலாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான உறுதியான தேதியை ரிசர்வ் வங்கி இன்னும் வழங்கவில்லை என்றாலும், இந்த விதி 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதி அனைத்து வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) பொருந்தும் என கூறப்படுகிறது.

வரி கணக்கு வங்கி

சமீப காலங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல் பட்டியலில் (ஆக்சன் லிஸ்ட்) தற்போது குறைந்தது 20 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web