குஷியில் மாணவர்கள்... பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 12 வரை நீட்டிப்பு... வெளியானது அறிவிப்பு!

 
விடுமுறை

இந்த வருடம் கோடை வெயில் நாடு முழுவதுமே அதிகரித்து காணப்பட்ட நிலையில், ரெமல் புயலுக்குப் பின் வெப்பநிலை இன்னும் தணியாமல் இருந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 126 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில், இன்னும் வெயில் தணியாததால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூன் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தை போலவே புதுவையிலும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை  கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்  பள்ளிகள் திறப்புக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  

பள்ளிகள்
இந்நிலையில், தமிழகத்திலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளுக்கு  பாடநூல்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே பிள்ளைகளுக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி பாடநூல்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ரூ.1.2 கோடியில் 4.18 கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவைகளை மாவட்ட மற்றும் மண்டல வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web