குஷியில் மாணவர்கள்... இன்று பள்ளிகளில் சர்க்கரைப் பொங்கலுடன் வரவேற்பு!

 
சர்க்கரை பொங்கல்
இன்று  தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் நாள் வகுப்புகள் துவங்கப்பட உள்ள நிலையில், சர்க்கரைப் பொங்கலுடன் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும்  பள்ளிகளில் மாணவர்கள் வரவேற்கப்பட உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்த நிலையில், ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்றே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட ஏதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் முன்னதாகவே கடந்த மே 31ம் தேதியே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

அதே போன்று அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் மாணவர்களுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில்  இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என ஏப்ரல் 14ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்க்கரை பொங்கல்

ஜூன் 3ம் தேதி விடுமுறை விடப்பட்டதை அடுத்து வரும் முதல் பணிநாளான இன்று ஜூன் 10 ம் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் வகுப்பு நாளில் சர்க்கரைப் பொங்கலுடன் மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web