பிக்பாசில் சண்டை தான் சுவாரஸ்யமே.... ஹரிஷ் கல்யாண் சர்ச்சை பேச்சு!!

 
பிக் பாஸ் 7

பிக்பாஸ் சீசன் 7 சக்கை போடு போட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்ற நிலையில்  7வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால்  மற்ற சீசன்களை போல இந்த சீசன் இல்லை என்ற குறையும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன.   
குறிப்பாக இந்த சீசனில் வீடு இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.   கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில்  பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றிவிட்டனர்.  

பிக்பாஸ் 7
இந்த 7வது சீசனில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவரை  வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பிரதீப் ஆண்டனி வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை தர குறைவாக பேசிய காரணத்தால் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து  பேசியுள்ளார்.

பிக்பாஸ் 7


அதில்  ஹரிஷ் கல்யாண் ” நான் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். மற்ற சீசன்களை போல அல்லாமல்  இந்த சீசனில் 2 வீடுகளாக பிரிக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த மாதிரி 2  வீடுகளாக பிக் பாஸ் பிரிக்கப்பட்டால் கண்டிப்பாக சண்டை வரத்தான் செய்யும்.அது மட்டுமில்லை பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் வருவது தான் சுவாரஸ்யம். அடுத்தடுத்து  சண்டைகள் வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்” என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web