இன்று சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி... கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

 
ஹாரிஸ் ஜெயராஜ்

ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் ஏற்பட்ட குழப்பத்திலும், குழறுபடியிலும், ரஹ்மானின் பெயருக்கு சமூக வலைத்தளங்களில் களங்களத்தை ரசிகர்கள் ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை அனுமதியளித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக லியோ திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவிற்கும் இப்படியான கட்டுப்பாடுகளே, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்தது என்று ரசிகர்கள் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ்

இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதே போன்று, இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும். இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது. பார்வையாளர்களுக்கு தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்யபட வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு தேவையான பார்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி காட்சிகள்.

கடந்த மாதம் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதிகளவில் போலியான டிக்கெட் விற்பனை காரணமாக குளறுபடி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பல ரசிகர்களும் தங்களது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்கள். இதனால், ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற வழக்கு வரை சென்றது. இதனைக் கருத்தில் கொண்டே, ஹாரிஸ் ஜெயராஸ் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு ’Noise and Grains’ நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web