பரபரப்பு... திமுக பிரமுகரின் மகன் கொடூரமாக வெட்டிக் கொலை.!!
சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் விவேகானந்தன். இவரது மகன் காமராஜ். இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல காமராஜ் இன்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் சரிந்த காமராஜை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!