குமரியில் வெந்நீர் மட்டுமே அருந்தினார்... சிறப்பு அறையை பயன்படுத்த மறுத்த பிரதமர் மோடி!

 
மோடி
 

கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. நேற்று மாலை விவேகானந்தர் மண்டபத்தில் தொடங்கிய இந்த தியானம் நாளை மதியம் நிறைவடைகிறது. மோடி காவி உடையில் தியானத்தில் இருக்கும் படமும், வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு பிரதமர்  மோடி வெந்நீரை மட்டுமே அருந்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் தியானம் செய்ய பிரத்யேக அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், அதை பயன்படுத்த மோடி மறுத்துவிட்டார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. தியான மண்டபத்தில் இரவு முழுவதும் தியானத்தில் இருந்தார் மோடி. இன்று காலை சூரிய உதயத்தைக் கண்டார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் பூஜையைத் தொடங்கினார். 

மோடி
பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இந்திய கடற்படையின் படகுகள், கடலோர காவல்படையின் கப்பல்களும் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன. நேற்று மாலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கிய மோடி கன்னியாகுமரிக்கு பயணம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரசாரங்களின் முடிவில் பிரதமர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2019ல், அவர்  தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்ததும் கேதார்நாத்துக்குச் சென்றிருந்தார், 2014ல், அவர் சிவாஜியின் பிரதாப்கரைப் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!