34 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்... விவசாயிகள் தலைவர் ஜகஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு!

 
ஜக்ஜித் சிங்

தொடர்ந்து 34 நாட்களாக பஞ்சாப் மாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய தலைவா் ஜகஜீத் சிங் தலேவாலை மருத்துவமனையில் அனுமதிக்க டிசம்பர் 31ம் தேதி வரை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் பஞ்சாப் எல்லையில் உள்ள கனெளரி பகுதியில் விவசாயி தலைவர் ஜகஜீத் சிங் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் போராட்டம், 34வது நாளாக இன்று நீடித்து வருகிறது. 

ஜகஜித்

இந்நிலையில், ஜகஜீத்துக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என்று அண்மையில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறை டிஜிபி பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் லாப் சிங் என்ற விவசாயி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக உச்சநீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறையில் உள்ளது. எனினும் வழக்கத்துக்கு மாறாக லாப் சிங்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக சனிக்கிழமை சிறப்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜகஜீத்துக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பஞ்சாப் அரசு பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

ஜகஜித்

பஞ்சாப் அரசின் அட்வகேட் ஜெனரல் குா்மிந்தா் சிங் வாதிடுகையில், 'ஜகஜீத்தை சூழ்ந்துள்ள விவசாயிகள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கின்றனா். போராட்ட களத்துக்கு மாநில அரசு சாா்பில் அனுப்பப்பட்ட மருத்துவ நிபுணா்கள் குழு, மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு ஜகஜீத்திடம் வலியுறுத்தினா். ஆனால் அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்துவிட்டாா்' என்றாா்.

அட்வகேட் ஜெனரலின் வாதத்தால் கோபமடைந்த நீதிபதிகள், 'சூழலை கட்டுக்குள் கொண்டுவர பஞ்சாப் அரசு போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஜகஜீத்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் விவசாயிகள், தற்கொலைக்குத் தூண்டும் குற்றச் செயலில் ஈடுபடுகின்றனா்.

ஜகஜீத்தை மருத்துவமனையில் அனுமதிக்க வரும் டிசம்பர் 31ம் தேதி வரை, மாநில அரசுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால், மத்திய அரசின் உதவியை மாநில அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டனா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!