அடப்பாவி... லைவ் வீடியோ லைக்ஸ்களுக்காக தீக்குளிக்க சொன்ன இளைஞன்!

 
ராமதாஸ்
 


இன்றைய இளைஞர்களிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வீடியோ தயாரிக்கும் மும்முரத்தில் உயிருக்கு ஆபத்தான முயற்சிகளில் கல்லூரி மாணவ-மாணவிகளும் கூட ஈடுபடுகின்றனர். நடுரோட்டில் பேருந்தை மடக்கி நடனமாடுவது, ரயில் முன்பாக நடனமாடுவது, அருவிகளின் உயரத்தில் ஏறி ரீல்ஸ் உருவாக்குவது என்று இவர்களது சாகசங்கள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.இந்நிலையில், வெளியான ரீல்ஸ் ஒன்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(52).

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில், பாலசுப்பிரமணியம் மீது புகார் தருவதற்காக, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு பாஸ்கர் சென்றுள்ளார். அப்போது தனது உடல் முழுவதும் தின்னர்  திரவத்தை தேய்த்துக் கொண்டு திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாஸ்கரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 
போலீசாரின் விசாரணையில் பாஸ்கர் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார் மேற்கொண்டு விசாரணையில் இறங்கினார்கள். 

புகார் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் புறப்பட்ட பாஸ்கரை, யூ-ட்யூப் சேனல் நடத்திவரும் விக்னேஸ்வரன்(30) என்பவர் தடுத்தி நிறுத்தி, “இப்படி வெறும் புகார் மனு கொடுத்தால் அதன் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். உங்க உடலில் தீயை வைத்துக் கொள்வது போல தற்கொலைக்கு முயலுங்க... அப்போ அதை நான் வீடியோவாக பதிவு செய்து யூ-ட்யூப்ல வெளியிடுகிறேன். வீடியோ வைரலானதும் உங்களுக்கும் நியாயம் கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார். 
தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் அதிக லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியெல்லாமா ஐடியா கொடுப்பார்கள் என்று அதிர்ந்த போலீசார், உடனடியாக விக்னஸ்வரனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!