உதவியாளரை மிரட்டி மசாஜ் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை!

 
விஜயாஸ்ரீ
 

கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் யாத்ராமி பகுதியில் கஸ்தூரி பாய் காந்தி உண்டு, உறைவிடப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக விஜயாஸ்ரீ பட்டீல் என்பவர் பணிபுரிந்து  வருகிறார். இவர் தினமும் பள்ளியில்  பணிபுரியும் ஊழியர்களை மசாஜ் செய்ய சொல்வதும், கால், கைகளை பிடித்துவிடும்படி கூறி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இந்நிலையில்  ஜூலை 18ம் தேதி பணியில் இருந்த விஜயாஸ்ரீ, பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து  வரும் ஒரு பெண் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார். அந்த பெண் முடியாது என்றாலும், தொடர்ந்து மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார்.  அதன்படி வேறு வழியின்றி அந்த பெண்ணும், விஜயாஸ்ரீயின் தோள்பட்டையை இரு கைகளால் மசாஜ் செய்துள்ளார். 

இதை பள்ளியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாட்ஸ்-அப் குழுவிலும் இந்த வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்து, தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?