திருச்சியில் தலைகள் சிதறும்... பட்டாக்கத்தியை உருவி போலீசாரை அதிர வைத்த இளைஞர்!

 
திருச்சி
 

‘திருச்சியில் தலைகள் சிதறும்...’ என்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, போலீசாரை பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி அதிர்ச்சியடைய செய்துள்ளார் இளைஞர்.சமீப காலங்களாக சமூக வலைத்தளங்கள் வரமாக இருந்த காலம் போய், சாபமாக மாறி வருகிறது. சமூக வலைத்தளங்களின் வீச்சை சாதகமாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி போலீசாரையே அதிர வைத்திருக்கிறார் திருச்சி இளைஞர் ஒருவர்.
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி எம்.ஜி.ஆர். நகர் துரை.

கடந்த ஜூலை 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தைலமரக் காட்டில் எம்.ஜி.ஆர்.நகர் துரையைப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இது ரவுடி துரையின் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "mgr-nagar-official" என்று ஐடி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது. 
அந்த வீடியோவில், திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தைப் பகிர்ந்து, "திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்" என்று பதிவிடப்பட்டு இருந்தது போலீசாரிடையேயும், பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வீடியோவைப் பதிவேற்றியது திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சோ்ந்த ராஜபாண்டி(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜபாண்டியை விசாரிக்க போலீசார் முயன்றனர். அப்போது ராஜபாண்டி, குழுமணி உறையூர் சாலையில் ராமநாதநல்லூர் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ராமநாதநல்லூர் பேருந்து நிலையத்திற்கு போலீசார்  சென்ற நிலையில், போலீசாரைக் கண்டதும் திடீரென பட்டாகத்தியை உருவி, போலீசாரை மிரட்டியிருக்கிறார் ராஜபாண்டி. அதன் பின்னர் ராஜபாண்டியை மடக்கிப் பிடித்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!