பெரும் பரபரப்பு.... பதவியேற்ற போது மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் !
சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான். இவர் நேற்று நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் மற்றும் எலிசபெத் லான் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.
JUST IN: Swedish Health Minister Elisabet Lann collapses at press conference pic.twitter.com/zhviF4kCYQ
— BNO News Live (@BNODesk) September 9, 2025
நேரலையில் நிகழ்ந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் லான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக துணை பிரதமர் எப்பா புஷ் உட்பட, அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் ஓடிச் சென்று எலிசபெத்திற்கு உதவி செய்தனர் .அவரை அங்கிருந்து வெளியே கொண்டு சென்று, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு எலிசபெத் லான் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ளார். பதவியேற்ற சிறிது நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் சுவீடனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
