ஆசியாவிலேயே முதன் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை!

 
அறுவைசிகிச்சை

இந்தியாவிலேயே முதன் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய்க்கு கடந்த  2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோய் அதாவது  இதயக் குழாய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  இதனால் நாயின் இதயத்தின் இடதுபுறத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.  ஜூலியட்டின் உரிமையாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக, அதற்கு இதய நோய்க்கான மருந்துகளை கொடுத்து அதனை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தனர்.  தொடர்ந்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ட்ரான்ஸ்கதேட்டர் எட்ஜ்-டூ-எட்ஜ் எனப்படும் விலங்குகளுக்கான அறுவை சிகிச்சை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாய்

இதனை அறிந்த  ஜூலியட்டின் உரிமையாளர்கள் இந்த சிகிச்சை மேற்கொள்வதற்காக தனியார் கால்நடை மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில்  மே 30 அன்று ஜூலியட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  2 நாட்களுக்குப் பிறகு, நல்ல உடல்நலத்துடன் இன்று ஜூலியட் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர் ஷர்மா  “மித்ரல் வால்வு நோய் இந்தியாவில் உள்ள நாய்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்று தான். உலகம் முழுவதும் உள்ள  நாய்களுக்கு  80 சதவீத இதய பிரச்னை இந்த நோயால் வருகிறது.நாய்களின் திடீர் இறப்பிற்கு இந்த நோய் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.  

 

இதுவரை முழுமையாக இதனைக் குணமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தற்போது  இந்த சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தியுள்ளோம். உலகில் மிகச்சில மையங்களிலேயே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகை இதயப் பிரச்னையை சரி செய்வது மனிதர்களுக்கு வரும் இதயக் குழாய் நோய் சிகிச்சை செயல்முறையைப் போன்றதே. கால்நடை மருத்துவத்துறையில் ஆசியாவில் முதல்முறையாக உலக அளவில்  2வது முறையாகவும் மருத்துவர் ஷர்மா குழு இந்த இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web