நெஞ்சை உறைய வைக்கும் பகீர் வீடியோ.. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது ஏறி இறங்கிய சொகுசு கார்!

 
நொய்டா

நொய்டாவின் செக்டார் 63, பி பிளாக்கில் தனது தாயுடன்  வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை, மீது வெள்ளிக்கிழமை இரவு ஒரு கார்  மோதியது. தகவல்களின்படி, காயமடைந்த சிறுமி கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


அந்த வீடியோவில், வீட்டின் வெளியே ஒரு பெண் தனது குழந்தையுடன் சாலையில் இருக்கின்றார். அப்போது வெள்ளை நிற கார் வந்து குழந்தையின் மீது மோதுவது தெளிவாகத் தெரிகிறது.  காரில் இருந்தவர் வெளியே வர, அங்கு சுற்றிலும் கூட்டம் கூடுகிறது. சிறுமியின் தாய் உடனடியாக தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அலறியடித்த நிலையில் அங்குமிங்கும் ஓடியுள்ளார்.

அருகில் நின்றவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு 18 மாத சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர் அறிக்கையின்படி, வீடியோவில் காணப்பட்ட பெண் ரிங்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் கனோஜியா என்ற நபருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசிக்கிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ஜூன் 28  இரவு, செக்டார்-63 காவல் நிலையப் பகுதியில் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இச்சம்பவம் குறித்து உடனடி கவனத்தில் கொண்டு செக்டார்-63 போலீசார் தீவிர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கார் டிரைவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web