நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... ட்ரம்ப் ஹோட்டல் முன்பு வெடித்த டெஸ்லா டிரக்... ஒருவர் பலி.... 7 பேர் படுகாயம்!
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிரம்ப். இவருக்கு சொந்தமான ஹோட்டல் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது. நேற்று ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Cybertruck explodes outside Trump Tower in Las Vegas on New Year’s Day. pic.twitter.com/De16XQqf4o
— Pop Crave (@PopCrave) January 1, 2025
இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர் டிரக் எனப்படும் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், புத்தாண்டு நாளாக புதன்கிழமை திடீரென்று இந்த சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னதாக, லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த நபா் ஓட்டி வந்த காரில் ஐஎஸ் கொடி மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூ ஆா்லியன்ஸில் நடந்ததை போன்று, லாஸ் வேகாஸில் சைபர் டிரக் வெடித்தது தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!