வீட்டை விட்டு வெளியே வராதீங்க... 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலெர்ட்.!

 
வெப்ப அலை

 தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெப்ப அலை மே முதல் வாரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. சென்னை மாநகரில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க பலபகுதிகளில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது.

வெப்ப அலை

ஏப்ரல்  29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெயில்


இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய  19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் இருப்பவர்கள் பகல் பொழுதுகளில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web