மக்களே உஷார்... காலை 10 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 
வெப்ப அலை

  
தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வானிலை மையம் இது குறித்து மாவட்ட கலெக்டர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்  தமிழகத்தில் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கரூர், கோவை ஆட்சியர்கள் வலியுறுத்தினர்.  வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெயில்

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை காரணமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எல்நினோ காரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மிக வெப்ப சூழ்நிலையால் தமிழகத்தில்  வெயில் மற்றும் வெப்ப அளவுகள் இயல்பைவிட அதிகமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்   இந்த ஆண்டு  113 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என  வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


காலநிலை மாற்றத்தின் விளைவாக இது சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு  மேல் உயரக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புவியின் சராசரி வெப்பநிலை அளவை முன்பைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  19ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்த புவி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்ப நிலையை பூமி அடையக்கூடும். எல் நினோ 2024ம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கலாம். இதனால் 2025லும்  வெப்பம் மிகுந்த ஆண்டாக நிலவக்கூடும். தொடர்ந்து  ஒரு மாதத்திற்கு கடல் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.  

வெயில்


இதற்கு முன் 2016ல்  எல் நினோ உருவானது. அதனால்  உலகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது, காடுகளின் இழப்பு, பவளப்பாறைகள் வெளுத்தல், காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல் போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாக காரணமாக அமைந்துவிட்டது.  
எல் நினோ காரணமாக பருவ மழையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற போதிலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும். 1950க்கு பிறகு  தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறைகள் எல் நினோ காலத்தில்தான் வறட்சி நிலவும்.  மே மாதத்தில் இருக்கும் கத்திரி வெயில் நடப்பாண்டில்  ஜூன் வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.  113 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கலாம் என்கின்றனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web