உஷார்... அடுத்த 2 நாட்களும் வெப்ப அலை வீசும்... பத்திரம் மக்களே!

 
வெப்ப அலை

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரையில் உயரக்கூடும் என்றும், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெயில்
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் ஏப்ரல் 20ம் தேதிக்கு மேல், படிப்படியாக அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெயில்
குழந்தைகளையும், வயதானவர்களையும் தனியே வெளியில் அனுப்புவதைத் தவிர்க்கவும். வெயில் காலங்களில் பருத்தியினால் ஆன ஆடைகளை அணியவும். உங்கள் குழந்தைகளும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை மறக்காமல் உறுதி செய்து கொள்ளுங்கள்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!