மே 1 முதல் வெப்ப அலை ... வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

 
வெப்ப அலை

 தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலை காரணமாக  வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சில இடங்களில் உச்சபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என பெரும்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள்  தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.



இது குறித்து  தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை  பதிவிட்டுள்ளார். மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது . குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர்  மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில்  ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து 2வது வாரம் வரை மழை பெய்யலாம் எனவும்  தெரிவித்துள்ளார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web