அச்சச்சோ... மறுபடியுமா? தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

 
வெயில் பெண்கள்
 

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 12-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்றும் (ஜூன் 10) நாளையும் (ஜூன் 11ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில்
ஜூன் 12 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்- 3  செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.  

வெயில் காலம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web