அப்பாடா... ஜாலி தான்... தமிழ்நாட்டுக்கான வெயில் மஞ்சள் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது!

 
வெப்ப அலை

 இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது. இந்நிலையில்,  தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால்  பகுதிகளுக்கு மே 1 ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்திய வானிலை ஆய்வ் மையம்

இந்த அறிவிப்பை  இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.தற்போது  தமிழ்நாட்டுக்கான  வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.  அதே நேரத்தில்  கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும்,  ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  மே 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.   ஆனால் மே 2ம் தேதி 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!