பாமக மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை... தொண்டர்கள் கடும் அவதி!

 
பாமக மாநாடு ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில், பாமக மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை பெய்து வருவதால் மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்து கடும் அவதிப்பட்டனர்.

பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மகளிர் பெருவிழா மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

ராமதாஸ்

மயிலாடுதுறை பூம்புகாரில் பாமக நிறுவனர் தலைமையில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாமக மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பூம்புகாரில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

 ராமதாஸ்

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்தனர். மாநாட்டிற்கு அமைக்கப்பட்ட கூடாரத்தை மீறி மழைநீர் கொட்டி வருவதால் தொண்டர்கள் நனைந்தவாறு அங்கிருந்து வெளியேறினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?