இன்று 3 மாவட்டங்களில் கனமழை... பத்திரமா இருங்க மக்களே!
![அச்சச்சோ…! இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/migrated/d67f68e6685bcf32067e6c5bacef54a9.jpg)
தமிழகத்தில் இன்று விழுப்புரம் உட்பட இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் பத்திரமாக பாதுகாப்பா இருங்க மக்களே... அவசியமில்லாமல் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லாதீங்க.கர்ப்பிணிகள், சிறியவர்கள், முதியவர்களைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.
வங்கக்கடல் பகுதியில் வலுவிழந்து நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று டிசம்பர் 24ம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!