7 மாவட்டங்களில் மிரட்டப்போகும் கனமழை!!
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் தேஜ்புயல் உருவாகி உள்ளது. இதனால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை முதல் அதே இடத்தில் நிலவி வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவிற்கு தெற்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்) – விற்கு தெற்கே – தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகரக் கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அதி தீவிர ‘தேஜ்’ புயல் இன்று காலை மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவி வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அக்டோபர் 24ம் தேதி மிகத்தீவிர புயலாக ஏமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!