அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள்!

 
5 மாவட்டங்களில் கன மழை

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று ஜூன் 29ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  நாளையும், மறுநாளும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 மழை

ஜூன் 2 முதல் 5 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஜூன் 29 முதல்  ஜூலை 3 வரை அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2° 3° செல்சியஸ்பொறுத்தவரை  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது  அதே நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.   வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web