புதுக்கோட்டையில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்து கைக்குழந்தை மீட்பு!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் நேற்று இரவும் இடி மின்னலுடன் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் புதுக்கோட்டையே வெள்ளக்காடாக மாறியது. புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி, புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில், இடையாப்பட்டி பகுதியில் இருந்து வந்த காட்டாற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. இதேபோல் வடக்கு நான்காவது தெருவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் ஆட்டோ சிக்கிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் மற்றும் கைக்குழந்தையை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் வடிகால் சரியாக தூர்வாரப்படாததால் 5க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் அப்பகுதி மக்கள் கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், காமராஜபுரம் பகுதியில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், காமராஜபுரம் 21வது சாலையில் உள்ள இரண்டு வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால், இடைவிடாது பெய்த மழையால், இடிந்த வீட்டில் வசிப்பவர்கள் இரவில் தூங்கக் கூட முடியாமல், செல்ல இடம் இல்லாமல் துயரத்திற்கு ஆளாகினர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
