டெக்சாஸில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி.. 23 சிறுமிகள் மாயம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர்.
ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால், திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பலரும் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நடந்த கோடைக்கால முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர். அவர்களில் 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 டிரோன்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!