கனமழை... மண் சரிவு... இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

 
ஊட்டி ரயில் நிலச்சரிவு மண் சரிவு மரம் கனமழை

தமிழகம் முழுவதும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று கனமழைக்கான எச்சரிக்கை பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலையில், மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரிசெய்யும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைக்கு தினந்தோறும் காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மறுமார்க்கமாக ஊட்டி மலையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு இயற்கையை ரசிக்க வருகை தரும் நிலையில், பலரும் இந்த மலை ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். மலைப் பகுதிகளில் வளைந்து, நெளிந்து செல்லும் இந்த ரயிலில் பயணித்தப்படியே இயற்கையைக் கண்டு ரசிப்பது எல்லையில்லா அனுபவம். 

train

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி மலை ரயில் செல்லும் பாதையில் மரங்கள் சாய்ந்திருப்பதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை தினம் என்பதால், மழை குறித்து தெரியாமல் ஏற்கெனவே இந்த விடுமுறை தினத்திற்கு ஊட்டி மலை ரயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தவர்கள் ஏமாற்றுடன் சாலை மார்க்கமாக சென்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web